வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாய் குளியலறையில் தவிர விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.நேற்றுமுன்தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி தாய் ஒருவர் வவுனிய வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் நேற்றுமுன்தினம் விடுதியில் உள்ள குளியலறைக்குச் சென்ற நிலையில் தவறி விழுந்துநிலையில் உயிரிழந்துள்ளார்.அதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.