Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும்…
இலங்கை

இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும்…

ThanaBy ThanaApril 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் 04 கிராமங்கள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட உள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இதனால் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 90 கிராமங்களில் 1,668 வீடுகள் கட்டும் பணி இதுவரை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 732 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் 04 வீடமைப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மட்டத்திலான வீடமைப்புத் திட்டம் தென் மாகாணம், கிராம சக்தி வீட்டுத் திட்டம், வடக்கு மாகாணம், கிராம சக்தி வீடு திட்டம் அம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய நான்கு திட்டங்களாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்கு 600  வீடுகள் என்பதோடு மொத்தமாக 2400 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக இந்திய அரசால் ஒதுக்கப்பட்ட தொகை 2400 மில்லியன் ரூபாவாகும். ஏற்கனவே 807 மில்லியன் ரூபா இதற்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1592.7 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தவிர, அனுராதபுரம், மஹாவிலச்சிய, அலபத் கிராமம், பூஜ்ய மாதுருவாவில் உள்ள சோபித நினைவு கிராமத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியைப்பெற்றுள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 450 மில்லியன் ரூபா. இக்கிராமத்தில் கட்டப்பட உள்ள வீடுகளின் எண்ணிக்கை 115 ஆகும். அரசாங்க நிதியில் 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 90 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, இந்திய உதவியின் கீழ் தோட்டபுற வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படைப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இதன்படி, 8445 தோட்டபுற வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 23,646 மில்லியன் ரூபாவை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார். தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளை நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.