Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026

கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

August 14, 2026

வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காஸா சிறுவர் நிதியத்திற்கான பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை

காஸா சிறுவர் நிதியத்திற்கான பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ThanaBy ThanaApril 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

முதற்கட்டமாக, இந்த ஆண்டு இப்தார் நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதியில் இருந்து கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு மூலம் பலஸ்தீன அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கையளித்தார்.

அத்துடன், “Children of Gaza Fund” நிதியத்திற்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய, அந்த நிதியத்திற்கு பெருமளவான நிதி கிடைத்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நன்கொடையாளர்கள் 2024 ஏப்ரல் 30, வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் நன்கொடைகளை வழங்க விரும்புவர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வங்கியின் (7010) தப்ரோபன் கிளையில் (747) உள்ள கணக்கு இலக்கமான 7040016 க்கு வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான பற்றுச் சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜீர அபேவர்தன, எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பெருமளவில் அதிகரிப்பு

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.