நாவலபிட்டியவில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நாவலப்பிட்டி மொன்டிகிறிஸ்டோ கீழ்ப்பிரிவை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நண்பர்களுக்கு இடையில் கடந்த 23ம் திகதி ஏற்பட்ட மோதலே குறித்த தாக்குதலுக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 29 ம் திகதி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
