கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர், அதாவது தனியார் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெற்றதால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொழிநுட்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட சிக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 452,979 பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள்அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
