Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக தற்போது சட்ட சமரை எதிர்கொள்ள நடவடிக்கை – பாரத் அருள்சாமி
மலையகம்

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக தற்போது சட்ட சமரை எதிர்கொள்ள நடவடிக்கை – பாரத் அருள்சாமி

ThanaBy ThanaMay 10, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

க.கிஷாந்தன்)

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இம்மாதம் முதல் காணி உரித்தை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளது – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அட்டன் பகுதியில் 10.05.2024 அன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசாங்கத்துக்குரிய ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கி வருவதாலும், இ.தொ.கா பக்கம் மக்கள் சக்தி நிற்பதாலும் பேரம் பேசுதல் மூலம் மக்களுக்குரிய அபிவிருத்தி அரசியல் மற்றும் உரிமை அரசியலை வெற்றிகரமாக காங்கிரஸ் முன்னெடுத்துவருகின்றது.

குறிப்பாக சம்பள உயர்வு விவகாரத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் இழுத்தடிப்பு போக்கை கடைபிடித்த நிலையில், இது விடயத்தில் அரசு தலையிட்டு நாளொன்றுக்கு ஆயிரத்து 700 ரூபா கிடைப்பதற்கு வழிசமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. கம்பனிகளுக்கு எதிராக தற்போது சட்ட சமரை எதிர்கொள்வதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

அத்துடன், மே 26 ஆம் திகதி முதல் சௌமியபூமி திட்டத்தின்கீழ் காணி உரித்து வழங்கப்படும். இது மலையக வரலாற்றில் மகத்தானதொரு அரசியல் வெற்றியாகும். எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக இருப்பதால்தான் அமைச்சரவை ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிகின்றது.

ஆனால் இ.தொ.காவை விமர்சித்தால்தான் சிலருக்கு அரசியல் செய்ய முடியும். சரி, காங்கிரஸால் தான் அவர்களும் வாழ்கின்றனர், வாழ்ந்துவிட்டு போகட்டும். தற்போது மக்களுக்கு சேவை செய்வது யார்? வாய்ச்சொல் அரசியல் நடத்துவது யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைவிட, அரச நிறுவனங்களின் பிரதானி பதவி மேலானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். சலுகைகள் கிடைப்பதாகவும் புது விளக்கம் அளித்துள்ளார். சலுகைகளுக்காக எப்போதும் ஏங்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, இப்பதவியை ஏற்றால் நல்லது. ஏனெனில் அதிஉயர் சபையான நாடாளுமன்றம்கூட சிறந்த இடமாக மாறும் – என்றார் பாரத் அருள்சாமி.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    கம்பளை நகரில் பாலத்தில் பாய்ந்த பெண்: போத்தலாப்பிட்டி பகுதியில் சடலமாக மீட்பு!

    August 11, 2026
    Editors Picks

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.