பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாய் என உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியீடு.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று (21) வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினது செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் அறிவித்தார்.
அதனடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1350 ரூபாவாகவும் செயல்திறன் அடிப்படையில் 350 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2385/14 எனும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.