கணித பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லாமலேயே 3A சித்திகளைப் பெற்று சாதித்து காட்டிய மாணவர்கள்.
இறக்குவானை பரி,யோவான் தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை. இம்முறை வெளிவந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இறக்குவானை பரி யோவான் தமிழ் தேசிய கல்லூரியின் இரு மாணவர்கள் உயர்தர பௌதீக விஞ்ஞான துறையில் 3A சித்திகளை பெற்று இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளின் மத்தியில் சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்கள் பிரேமநாத் சஜிநாத், இராஜேந்திரன் ரொஹான் இருவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
அதிபர்
