வி.தீபன்ராஜ்
தோட்ட அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்று (04) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தலவாக்கலை நானுஓயா தோட்ட பிரிவில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஒருவரை நேற்றைய தினம் (03) மீண்டும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என தோட்ட அதிகாரி கூறியுள்ளனர் அதனை மறுத்த தொழிலாளரை தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசி அவரை தாக்க முற்பட்டுள்ளார் இதனால் தோட்ட மக்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிராகவும் , மேலதிக நேரம் தொழில் செய்தாலும் உரிய கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும் தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை ,சிறிய தவறு செய்தாலும் கடுமையாக எச்சரிக்கின்றனர் எனத் தெரிவித்தும் தோட்ட அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துமே தொழிலாளர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.