லுணுகலை, சுவிண்டன் தோட்டம் மேற்பிரிவு, அம்மன் புரம், “Golden Eagle” விளையாட்டு கழகத்தின், கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா மற்றும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது பகி பாலச்சந்திரன் சமூக நற்பணி அமைப்பின் அனுசரணையின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊவா மாகாண அமைப்பாளருமான பகி பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்திருந்தார்.
லுணுகலை பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட 20 ற்கும் மேற்பட்ட கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டிருந்த இக்கரப்பந்தாட்ட போட்டியில் ஹொப்டன் ஓம் சக்தி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது.


