வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், கடந்த 2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட தண்டப்பணம் ஊடாக 70 இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு நபர்களால் வனங்களுக்கு மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு வழக்குத் தொடர்ந்து அதன் ஊடாக பெறப்பட்ட அபராதத் தொகைகளின் மூலம் இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மொத்தமாக 1,421 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. இவற்றில் அதிக வருமானம் அனுமதிப்பத்திர கட்டணங்களின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்திற்குள், யால தேசிய சரணாலயம், வில்பத்து மற்றும் வஸ்கமுவ தேசிய தேசிய சரணாலயங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பஙயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கமத்தொழில், பாதுவனவிலங்கு காப்புத் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.