இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டவரான கிறிஸ் சில்வர்வுட் தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு கிறிஸ் சில்வர்வுட் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
