இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் 4 ஆயிரத்து 700 பஸ்களை ,நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடுத்துவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர வைபவத்திற்கு அமைவாக மேலும் 1,000 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும். ரயில் சேவை குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கான சிசுசெரிய பஸ் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது;.
பேண்தகு போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.