வோர்விக் அம்பேவெல சரஸ்வதி தமிழ் வித்தியாலத்தின் கடந்த மூன்று மாத காலமாக ஆங்கில பாட ஆசிரியர் இல்லாமையால் மாணவர்கள், பெற்றோர் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் 17.07.2024 ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த பாடசாலை கஷ்ட்டப்பிரதேச பாடசாலையாகும், சுமார் 145 பெருந்தோட்ட மாணவர்கள் கல்வி கற்பதோடு இம்முறை க.பொ.த (சா/த) மாணவர் பெரும் அசௌகரிய நிலையை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து இந்நிலை நீடிக்குமாயின் பெற்றோர், மாணவர்கள் இப்போராட்டத்தை தொடர் போராட்டமாக நாடாத்தவுள்ளனர்.
குறித்த ஆர்பாட்ட காரர்கள் அதிபர், ஆசிரியர்களை வழிமறித்து பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நடாத்த விடாமல் போராட்டத்தை முன்னெடுத்து வருவதை இதுவரை வலய, மாகாண கலவி அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பாரிய பிரச்சினைக்கு வழிகோறுகிறது.
