பாண் விலை நிர்ணயம் தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அண்மையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், அதில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் இன்று இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பாணின் விலையைக் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
