எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்கு முழு தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை உப குழு நேற்று கூடிய போதே, அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
