நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் ரக வாகனமொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் விபத்துடன் தொடர்புடைய சாரதி நிட்டம்புவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் .சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
