மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் கிரியை இன்று இடம்பெறவுள்ளது. பொரளை – பொது மயானத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு இறுதி சடங்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் இன்றும், காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
