நுவரெலியாவில் பெண்கள் அபிவிருத்திக்கான சுயதொழில் விற்பனை நிலையம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் USAID நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் கீழ் இன்று 13.09.2024 உத்தியோகபூர்வமாக நுவரெலியா மாவட்ட உதவி செயலாளர் திலிகா கவிசேகர அம்மையாரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் இவ்வேளை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பெண்கள் அமைப்பின் ஊடாகபெற்றுள்ள 30 பெண்கள் இந்த வியாபார கட்டிட தொகுதியில் பயன் பெறுகின்றனர். இந்த வேலை திட்டம் சம்பந்தமாக USAID நிறுவனத்தின் ஊடாக 6.3 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
