மஸ்கெலியா நல்லதண்ணி புரவுன்லோ பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்க சென்ற பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை அளிக்கச் சென்ற 61 வயதுடைய ஜராங்கணி என்ற பெண் முச்சக்கர வண்டியில் மோதுண்டு மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
