ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு வியாழக்கிழமை (26), இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, வெற்றிடமான பொது செயலாளர் பதவிக்கு முருகேசு பரணிதரனை ஏகமனதாக நியமித்தது.
முருகேசு பரணிதரன் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் அரசியல் குழு உறுப்பினராகவும் பதவி வகின்றார்.