Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

September 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

September 22, 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொட்டகலை பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு – மருந்தகங்ளிலும் விற்பனை
Breaking

கொட்டகலை பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு – மருந்தகங்ளிலும் விற்பனை

ThanaBy ThanaNovember 22, 2022No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போன்று போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை மீட்கும் வேலைத்திட்டமும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் ,கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் 20/11/2022 மாலை இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான ஆரம்கட்ட கலந்துரையாடல்  இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நகர வர்த்தகர்கள், மதகுருமார்கள், வாகன சாரதிகள், பெற்றோர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கொட்டகலை பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவர்கள் பல்வேறு போதைப்பொருட்களை பாவிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என சுட்டிக்காட்டினர்.

அவ்வாறான மாணவர்கள் இனங்காணப்பட்டு, அந்த மாணவர்களை வகுப்புக்களுக்கு தடைவிதித்து, அதற்கமைவாக, போதைப்பொருள் பாவனையிலிருந்து ஏனைய மாணவர்களை காப்பாற்ற, பெற்றோரின் ஆதரவுடன் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளில் 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களின் வருகை குறைவாக  காணப்படுவதாகவும், அந்த மாணவர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இதன்போது அதிபர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, கொட்டகலை நகரில்  குறிப்பிட்ட சில மருந்துக் கடைகளில் (பாமசி) பாடசாலை மாணவர்களுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்வதாகவும், போதைப்பொருளை வாங்கிய பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வந்து மிக இரகசியமாக போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும் அதிபர்கள் இதன்போது மேலும் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை பற்றி பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொது மக்கள் உதவி செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.