Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026

அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் பெண்ணொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது
இலங்கை

பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் பெண்ணொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது

ThanaBy ThanaDecember 8, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 5ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பதவிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் கிரியிப்பன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினரால் வெலிஓய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவைப் பெற்று பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக வெலிஓயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் மஹியங்கனை மற்றும் எஹெட்டுகஸ்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த 26, 30 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

இந்நிலையில், பிரதான சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட T56 ரக துப்பாக்கியே சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்

    August 28, 2026
    Editors Picks

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

    August 28, 2026

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.