Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026

நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

October 10, 2026

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அனர்த்த அபாயம் , சில வீதிகளின் ஊடான பயணம் குறித்தும் எச்சரிக்கை- பசறை நிருபர்
இலங்கை

பதுளை மாவட்டத்தில் மண் சரிவு அனர்த்த அபாயம் , சில வீதிகளின் ஊடான பயணம் குறித்தும் எச்சரிக்கை- பசறை நிருபர்

ThanaBy ThanaDecember 16, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை நிருபர்.      15.12.2024

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாகவும் பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார மாவட்டத்திற்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வனர்த்த எச்சரிக்கை தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; பதுளை- பசறை வீதி, எல்ல- வெல்லவாய வீதி மற்றும் பசறை- நமுனுகுல வீதி போன்றவற்றில் பயணிக்கும் போது வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக பதுளை- பசறை வீதியின் 6ஆம், 7ஆம், 9ஆம் மைல்கல் பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.  எல்ல- வெல்லவாய வீதியின் 5ஆம், 6ஆம் மைல்கல் பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்த அபாயம் உள்ளது . நமுனுகுல வீதியில் கனவரல்ல பகுதியில்மண்சரிவு அனர்த்தம் நிலவுகிறது. இவ் அபாய நிலமையைக் கருத்திற் கொண்டே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் தமது வசிப்பிடங்களுக்கு அருகில் நிலப்பரப்பில் வெடிப்புகள் ஏற்பட்டு, நிலத்திற்கு அடியில் இருந்து நீர் ஊற்றுகள் ஏற்பட்டு நீர் வெளியேறத் தொடங்கினால் உடனடியாக அருகில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கு அறிவித்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தெரிவித்துள்ளார்.  பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் ஆரம்பமாகும் பலத்த மழை இரவு வரை நீடிக்கின்றது . கடும் குளிருடன் கூடிய பனிமூட்டம் காலை வேளையில் நிலவுவதை பல பகுதிகளில் அவதானிக்க முடிகிறது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.