தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் லுணுகலைப் பகுதியிலும் மழை பெய்து கொண்டிருந்த வேளை, இரவு 7 .00 மணியளவில் லுணுகலை சோலன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் எனும் 65 வயதுடைய நபர் லுணுகலை நகருக்குச் சென்று பங்களா தோட்டம் வழியாக தனது வீட்டுக்கு செல்லும் வேளையில் பங்களா தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றை கடக்க முற்பட்ட வேளை, ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
குறித்த நபர் ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் சென்று மர வேரை பிடித்த வண்ணம் இருந்துள்ளார்.
குறித்த நபர் ஆற்றில் விழுவதை கண்ட அயலவர் ஒருவர் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து இரவு 119 விஷேட கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் P.S.69801 பிரதீப் , P.C.71843 உபுல் குமார ஆகிய இருவரும் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு தன்னுயிரையும் துச்சமென நினைத்து உடன் மர வேரை பிடித்து கொண்டிருந்த நபரை காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று இரவு சுமார் 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாழ்த்துக்கள் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்.
ராமு தனராஜா
