நுவெரெலியா மாவட்டத்தின் மஸ்கேலியா லக்சபான பிரதேசத்தின் 08 பாலர் பாடசாலையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கான கலை விழாவானது எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாழமலை கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற உள்ளது.
சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், கௌரவிப்புக்கள், பரிசளிப்பு நிகழ்வுகள் என பல்வேறுபட்ட சுவாரஸ்யமான விடயங்கள் அரங்கேற காத்திருக்கின்றன.
இந்த நிகழ்வானது மலையக மக்கள் மன்றம் நடாத்தும் 2025 ஆம் ஆண்டின் மாபெரும் நிகழ்வாகும்.
எனவே லக்சபான பிரதேசத்தின் அத்தனை நல் உள்ளங்களையும் அன்போடு அழைக்கிறது மலையக மக்கள் மன்றம் . மற்றும் கர்ணா அறக்கட்டளை அமைப்பு.
பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகள், தோட்ட முகாமைத்துவம் மற்றும் இளைஞர் அமைப்புகள்.
நன்றி
தகவல் கே.ரவீந்திரன்.
செயலாளர்.
மலையக மக்கள் மன்றம்.
( *Hill Country Peopl’s Foundation)*
