Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

October 10, 2026

நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

October 10, 2026

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ரயிலில் காணாமல் போன இந்தியரின் பயணப்பையை ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்தனர் .
உள்நாட்டு செய்திகள்

ரயிலில் காணாமல் போன இந்தியரின் பயணப்பையை ஹட்டன் மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்தனர் .

ThanaBy ThanaJanuary 9, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.

எல்ல பிரதேசத்துக்கு பயணம் செய்த 39 வயதுடைய சுற்றுலாப் பயணியின் பயணப்பை வட்டவளை மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் காணாம் போயிருந்த நிலையில், உடனடியாக ஹட்டன் ரயில் நிலைய அதிபரிடம் அவர் முறையிட்டுள்ளார்.

பின்னர் இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன பயணப்பை போன்ற ஒரு பையுடன் ரயிலில் வந்த ஒருவர் முச்சக்கர வண்டியில் வட்டவளை பகுதிக்கு பயணம் செய்தமை உறுதி செய்யப்பட்டது.

பின்னர், சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியைக் கண்டுபிடித்து விசாரித்தபோது, ​​கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தில் அத்தகைய பையுடன் ஒருவர் ஏறியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பேருந்து, டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த போது, வெளிநாட்டவரின் பயணப்பை அங்கு மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் தனது பயணப்பையை கண்டுபிடித்ததற்கு இந்திய நாட்டவர் நன்றி தெரிவித்துடன், யாரோ ஒருவர் தவறுதலாக பையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பயணப்பையை எடுத்துச் சென்ற நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்தி வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Editors Picks

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரிய  கவனயீர்ப்பு போராட்டம்!

    October 10, 2026

    நுவரெலியாவில் OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம்!

    October 10, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.