டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.
செ.திவாகரன்
டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
குறித்த நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையொட்டி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இந்நிலையில், சந்தேக நபர் விசாரணைக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
