மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் டன்பார் கீழ்ப்பிரிவு அருள்மிகு ஓம்ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
குளிர்ச்சி தந்து வளர்ச்சி தந்து வாழவைக்கும் அம்மா
குறையின்றி வளத்துடனே வாழ எமக்கருள்வாய் தாயே
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்
உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி
குறைகளைந்து நிறை காத்து வாழவைக்கும் அம்மா
கலக்கமின்றி நிம்மதியாய் வாழ எமக்கருள்வாய் தாயே
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்
உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி
மலையகத்தில் உயர் நிலத்தில் இருந்தருளும் அம்மா
மானமுடன் வாழ என்றும் எமக்கருள்வாய் தாயே
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்
உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி
அருள் பொழிந்து அரவணைத்து வாழவைக்கும் அம்மா
அச்சமின்றி உறுதியுடன் வாழ எமக்கருள்வாய் தாயே
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்
உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி
டன்பாரில் கோயில் கொண்டு காட்சி தரும் அம்மா
தெளிவுடனே என்றும் வாழ எமக்கருள்வாய் தாயே
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்
உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி
அன்பு கொண்டோர் உள்ளங்களில் உறைந்தருளும் அம்மா
தொல்லையின்றி மகிழ்ச்சியுடன் வாழ எமக்கருள்வாய் தாயே
உள்ளத்தில் உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்
உடனிருந்து காத்திடுவாய் அன்னை முத்துமாரி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.