இன்று மதியம் டிக்கோயா சவுத் வணராஜா பகுதியில் மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இச் சம்பவம் இன்று மதியம் டிக்கோயா சவுத் வணராஜா பகுதியில் இடம் பெற்று உள்ளது.
இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் சிறிய அளவில் சேதம் அடைந்து உள்ளது.இதன் போது உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
மரக் கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தோட்ட நிர்வாகமும் குடியிருப்பாளர்களும்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
