பதுளை- பண்டாரவளை வீதியின் தெமோதரை பகுதியில் கட்டிடங்களுக்கு பதிக்கும் பளிங்கு கற்ககளை டைல் ஏற்றிவந்த கனரக லொறி ஒன்று வேகக் கட்டுபாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (23) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பசறை நிருபர்.
