கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம், சப்புகஸ்கந்த மற்றும் ஆனியாகந்த பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இன்று காலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்விநியோகத்தடைக்கு மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையே காரணம் என அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
