நேற்றைய தினம் கல்விக்கு கரம் கொடுக்கும் முகமாக இலங்கை மலையக கல்வி அபிவிருத்திக்குழுவின் சிரேஷ்ட அங்கத்தவர் திருமதி். நிவேதா மற்றும் திருமதி.கலைச்செல்வி ஆகியோரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட க/டெல்டா வடக்கு தமிழ் வித்தியாலத்தில் கல்வி பயிலும் சுமார் 45 மாணவர்களுக்கான பாடசாலை புத்தகபைகள், உணவு பெட்டி மற்றும் குடிநீர் போத்தல் அடங்கிய பொதி வழங்கிவைக்கப்பட்டதோடு அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டது. இலங்கை மலையக கல்வி அபிவிருத்தி குழுவின் பிரதான அமைப்பாளர் அமுதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு சிறப்பித்ததோடு, சிறப்பு அதிதிகளாக விழித்தெழு அறக்கட்டளையின் கொத்மலை ஹெல்பொட பிரதேச ஒருங்கிணைப்பாளர் தேசபந்து S.D நிமலஸ்பரன் JP, அயல் பாடசாலைகளின் அதிபர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் கடந்த முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திய மாணவன், 100க்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள், அதிபர், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் யாவும் அதிபர், ஆசிரியர்களின் பூரண அமுலாக்கத்திலும் நேர்த்தியான நெறியாள்கையிலும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்
தகவல்:-
இலங்கை மலையக கல்வி அபிவிருத்தி குழு.
