புபுரஸ்ஸ கலைவாணி தமிழ் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும் க/கலைவாணி தமிழ் வித்யாலயாம் உருவாவதற்கு வித்திட்டவருமான பெரும் மதிப்புக்குரிய பெ. சின்னையா அவர்களுடைய மாபெரும் பாராட்டு விழா கடந்த சனிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் மா. கணேஷ்குமார் அவர்களின் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் சமூகம் ஒன்றிணைந்து ஒழுங்கமைத்திருந்த இந்த விழாவானது மிக நேர்த்தியாக நடந்து முடிந்தது. முன்னாள் அதிபர் பெ. சின்னையா அவர்களுடைய பெயர் பிரதான மண்டபத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அத்தோடு பெரும்பாலான பழைய மாணவர்கள் ஒன்றிணைந்தும் தனிப்பட்ட முறையிலும் கௌரவ ஆசான் அவர்களுக்கு மரியாதை செய்தமை பழைய மாணவர்கள் மத்தியில் பெரும்நெகிழ்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

