மாத்தளை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (21) பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
மாத்தளை வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நயோமி குறித்த கட்டிடத்தை திறந்துவைத்தார்.
இவர் கல்வி சமூகத்தை இன,மொழி ,பேதங்களுக்கு அப்பாற்பட்டு குறித்த கல்வி வலயத்தில் செயற்பட்டுவருவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


