மலையக பிரதேசத்தில் அண்மை காலமாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் அக்கரப்பத்னை டயகம பிரதேசத்தில் அண்மை காலமாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த காரணங்கள் காரணமாக சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு சிறுவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிகின்றன.
இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலும் குடும்பங்களில் ஏற்படும் வன்முறைகளை தடுக்கும் வகையில் டயகம முதலாம் பிரிவு பிரதேசத்தில் இயங்கும் வாழ்வின் வசந்தம் தைரிய தீபங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கருத்தரங்கு டயகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
சரண்யா மாரியப்பன் வளவாராக கலந்துக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

