Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

September 1, 2026

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

September 1, 2026

காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

September 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்
இலங்கை

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்

ThanaBy ThanaApril 1, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பெரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay அவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்பு இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கருதப்படும் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிலையான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கென சர்வதேசத்தின் முன்னணி நிபுணர்களை இணைக்கும் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வத்தைக் கொண்டுள்ள பிரிவுகள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026

    பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை

    August 31, 2026
    Editors Picks

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026

    800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது

    September 1, 2026

    சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!

    September 1, 2026

    களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் உயிரிழப்பு

    September 1, 2026

    காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

    September 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.