புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் நிவாரண முறையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிவாரண பொதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு குறித்த நிவாரண பொதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிவாரண பொதிகளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் லங்கா சதொசா மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி , அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக புதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த 8 இலட்சம் பேருக்கு, 5,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய நிவாரணப் பொதியை 2,500 ரூபாய் என்ற நிவாரண விலையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
