காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு வயதுடைய சிறுவன் நேற்று (27) உயிரிழந்துள்ள நிலையில் , வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடந்த மாதம் கடித்துள்ளதாகவும், பின்னர் சிறுவன் இது குறித்து வீட்டாரிடம் எதுவும் கூறாமல், கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததை் தொடர்ந்து, சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் கடந்த 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
