பாணந்துறை, ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்த்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிரணை பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
