நேற்று (12) இந்தியா விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் லண்டன் புறப்பட இருந்த பெண் ஒருவர் விமானத்தை தவறவிட்டு உயிர்தப்பியுள்ளார்.
பூமி சவுகான் என்ற குறித்த பெண் விமான நிலையத்திற்கு புறப்பட வேலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் விமானத்தைத் தவறவிட்டார். இதனால், ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த அவர் பேரிழப்பு பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் உடைந்துவிட்டேன். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் முற்றிலும் வெறுமையாக உள்ளது என்று அவர் கண்கலங்கியுள்ளார்.
விமானத்தைத் தவறவிட்டதால், மதியம் 1.30 மணியளவில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக சவுகான் தெரிவித்துள்ளார்.
லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சவுகான் ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்த அவர், தனது கணவருடன் லண்டனில் வசிக்கிறார்.
