உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கியிடையில் கடந்த ஜூன் 11 லண்டனில் உள்ள லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையம் இழந்தது.
அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தத நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி, 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா அணி 05 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்தநிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அந்த அணி சார்பில் எய்டின் மார்க்கம் 136 ஓட்டங்களையும் அணித்தலைவர் டெம்பா பகவுமா 66 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் மைக்கல் ஸ்டக் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
