கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எகிரிய வத்த மாளிகாவத்தைப் பிரதேசத்தில் சேனை ஒன்றில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்துக்கிடமான இடத்தில் தேடுதலை மேற்கொண்ட கந்தகெடிய குற்றத்தடுப்பு பிரிவினர் மூன்று , நான்கு அடி உயரமாக வளர்க்கப்பட்டுள்ள 55 கஞ்சா செடிகளை கண்டுபிடித்துள்ளதோடு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி (கட்டுத்துவக்கு) ஒன்றையும் கைப்பற்றினர்.
அத்தோடு 52 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் கந்தகெடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ராமு தனராஜா