பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி ,இன்று (14) காலை 8.00 மணி தொடக்கம் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமானது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (13) நண்பகல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மத்தியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
“நேற்று விண்ணப்பங்களை ஒப்படைத்த அனைவரது கடவுச்சீட்டுக்களும் இன்று வழங்கப்படுவதாக “குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.
இன்றைய தினம் திணைக்களத்திற்கு வருகை தர முடியாதவர்களுக்கு கொரியர் சேவையின் மூலம் கடவுச்சீட்டை வீடுகளில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் ,”சேவையை பெற்றுக் கொள்வதற்காக இன்று நேரத்தை ஒதுக்கி கொண்டவர்கள் இன்றைய தினம் அங்கு வருகை தர வேண்டாம் “என குறிப்பிட்டுள்ளது.
நேரத்தை ஒதுக்கி கொணடவர்கள் குறிப்பிட்ட தினத்தில் சமூகமளிக்காது அதற்கு பின்னரான தினத்தில் வருகை தருமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுகுடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.