திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் நேற்று (26) மாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவானது.
துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிக்கும் உயிரிழந்தவரின் மகனின் மனைவிக்கும் இடையிலான உறவின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
