ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு!
———————————————————————————————
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் அதிகரித்துள்ள நீர்க்கட்டணங்களினால் கடுமையான அசெளகரியங்களை எதிர்நோக்கிய கல்முனை பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கு நிவாரணமாக, ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பு தனது சமூகப்பணியை இன்னும் ஒரு முறை சிறப்பாக நிகழ்த்தியுள்ளது.
மத வேறுபாடின்றி சமூக நலனுக்காக சேவை செய்து வரும் இவ்வமைப்பு, YWMA பேரவையின் அனுசரணையுடன், பயனாளர்களை இனங்கண்டு அவர்களுக்காக குழாய்க்கிணறுகளை அமைத்துள்ளது.
இந்த மனிதநேய முயற்சி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பேரில் குறுகிய காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது.
புதியதாக அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகள் பயனாளிகளின் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பிரதேசவாசிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் தேவையை உணர்ந்து மாவட்டம் பூராக செயலில் இறங்கும் ரஹ்மத் பவுண்டேசனின் இந்நடவடிக்கை, சமூகநல பணியின் சிறந்த எடுத்துக்காட்டாக பலராலும் பாராட்டப்படுகிறது.
