Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்
இலங்கை

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

ThanaBy ThanaNovember 26, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

• “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” 29 ஆம் திகதி

• “கடற்படை பங்களிப்புடனான சிரமதான நடவடிக்கை” டிசம்பர் 13 – 14

சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு, சிவனொளிபாத மலையின் புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி, குறித்த சூழல் கட்டமைப்பை பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் மீண்டும் மாசடைவதைத் தடுக்கவும் கூட்டு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையின் தலைமையிலான இந்த “சிறப்பு நடவடிக்கை” நவம்பர் 29 வரை நடைபெறும்.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கடைசி நாளான நவம்பர் 29 ஆம் திகதி, நல்லதன்னி மற்றும் பலாபத்தல நுழைவாயில்களில் “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

சிவனொளிபாத தளத்தை பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கத்துடன், இந்த யாத்திரை காலத்தில் ஒரு லிட்டருக்கும் குறைவான (PET) போத்தல்கள், ஒற்றைப் பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொலிதீன் உறைகள் கொண்ட பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மவுசாகலை நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள சூழலை சுத்தம் செய்வதற்காக “கடற்படை பங்களிப்புடனான நடவடிக்கையை” மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நீண்டகால நடவடிக்கைகளாக, சிவனொளிபாத தளத்தில் நீர் வசதிகள் மற்றும் மலசலகூடக் கட்டமைப்பை முறைமைப்படுத்துதல், வீதியின் இருபுறமும் தரமான விற்பனை நிலையங்கள், நல்லதன்னி அருகே வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்றை நிறுவுதல் மற்றும் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்திற்கு பொது நிர்வாக அமைச்சு, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகங்கள், முப்படைகள், இரத்தினபுரி மற்றும் ஹட்டன் டிக்கோயா, அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச சபைகள், இலங்கை பொலிஸார், தொண்டர் அமைப்புகள், சுற்றாடல் அமைப்புகள் உட்பட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-11-26

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.