பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது .
இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 19 பெண்களும் , 3 ஆண்களும் அடங்குகின்றனர் .
இவர்கள் அனைவரும் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதோடு 7 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த லொறியில் செஞ்சேமிஸ், நெளுவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்டாரவளை ஐஸ்லேபி பகுதிக்கு தொழிலுக்கு சென்று வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் தடுப்பு இயங்காமையே இவ்விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா