புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவடன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரும் வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்தனர்.
காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
