Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

June 13, 2026

உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

June 13, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

June 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் கத்தோலிக்க பாதிரியார்கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
Breaking

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் கத்தோலிக்க பாதிரியார்கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

ThanaBy ThanaJanuary 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் கத்தோலிக்க பாதிரியார், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (25) பிற்பகல் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாகதெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தம்மைத் தாக்கியதாகத் தெரிவித்து, கொடதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த மிலான் பிரியதர்ஷன என்ற கத்தோலிக்க பாதிரியார் நேற்றுமுன்தினம் (24) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று இரவு வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்களில் தம்மைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நீர்கொழும்பு வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த பாதிரியாரின் நலன் குறித்து விசாரிப்பதற்காக தேசிய கத்தோலிக்க வெகுஜன தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் ஆறு அதிகாரிகள் கம்பஹா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த விசாரணைப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அதிரடிப் படையைச் சேர்ந்த மூன்று பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பிஸ்கட் வாங்கச் சென்ற 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 65 வயது வர்த்தகர் மாதம்பேயில் கைது

    June 13, 2026

    உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

    June 13, 2026

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

    June 13, 2026

    ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) தலைவருக்கும் இடையில் சந்திப்பு

    June 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.